top of page

உடல்நலனுக்கு உகந்த உளுந்தங்களி

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

உளுந்தங்களி செய்வது எப்படி?

Ingredients

  • நெய்தல் உளுந்தங்களி மாவு - 1 கப்

  • நெய்தல் கருப்பட்டி - 3/4 கப்

  • தண்ணீர் - 2 1/2 கப்

  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

Preparation

Step 1

ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, கருப்பட்டி கரையும் வரை சூடு படுத்தவும். ஆறியவுடன், இக்கரைசலை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.


Step 2

அடிப்புறம் கணமான, அகலமான பாத்திரத்தில், கருப்பட்டி கரைசலுடன் , 1 கப் நெய்தல் உளுந்தங்களி மாவும், 1 லிருந்து 2 கப் தண்ணீரும் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்


Step 3

பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் தொடர்ந்து கிண்டிக் கொள்ளவும்.


Step 4

மாவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது 2 தேக்கரண்டி நல்லெண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு கெட்டியாகி பந்து போல் திரண்டு வரும் வரை கிண்டவும்.


Step 5

இப்போது கையை தண்ணீரில் நனைத்து, களி மாவைத் தொட்டுப்பார்த்தால் கையில் ஒட்டாது. இதுவே களிக்கான பதம். அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி விடவும்.


Step 6

உருண்டைகளாகப் பிடித்தோ, அப்படியே கூட சாப்பிடலாம். பரிமாறும் போது தேவைக்கேற்றார் போல் நல்லெண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம்.



bottom of page