top of page

நேந்திரம் மாவு தோசை

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

நேந்திரம் சத்து மாவில் பலகாரம் செய்யலாமா?

Ingredients

நான்கு கரண்டி தோசை மாவிற்கு ஒரு தேக்கரண்டி நேந்திரம் மாவு என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.

Preparation

  1. ஒரு தேக்கரண்டி நேந்திரம் மாவு எடுத்துக்கொண்டு கால் குவளை நீர் (சிறிது சிறிதாக) சேர்த்து நன்கு கூழ் போல் ஆகும் வரை கரைத்துக்கொள்ளவும். கரைக்கும் போது கட்டி ஏதும் இல்லாமல் கரைக்க வேண்டும்.

  2. நான்கு கரண்டி தோசை மாவுடன் கூழ் போல் கரைத்து வைத்த நேந்திரம் மாவை சேர்த்துக் கொள்ளவும். சுவை கூட்ட, இத்துடன் சிறிதளவு சீரகம் கொள்ளலாம்.


  3. இரண்டையும் கலந்தவுடன் தோசை மாவின் கெட்டித்தன்மை மிகுந்துவிடும் என்பதால் தேவையான அளவு தண்ணீர் சேர்துக்கொள்ளவும். தேவையிருப்பின் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  4. தோசை கல் தேவையான அளவு சூடானவுடன் கலந்து வைத்த மாவினை ஊற்றி, தோசை வெந்தவுடன் பரிமாறவும்.

bottom of page