About the Recipe
Ingredients
கருப்பட்டித் தூள் - 1 குவளை
பச்சரிசி - 1 குவளை
பால் - 3 குவளை
தண்ணீர் - 3 குவளை
நெய் - அரைக்குவளை
ஏலக்காய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி
முந்திரி - தேவைக்கு
உலர் திராட்சை - தேவைக்கு
Preparation
Step 1
அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவிக் கொள்ளவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு குவளைப் பால் மற்றும் அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.
Step 2
மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டித் தூளுடன் கால் குவளை தண்ணீர் சேர்த்து குறைந்த தணலில் (சிம்மில்) வைத்து நன்றாகக் கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
Step 3
பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும். பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும். மீதம் உள்ள ஒரு குவளை பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும். அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
Step 4
அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும். எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்!!