top of page

கருப்பட்டிப் பணியாரம்

Prep Time:

Cook Time:

Serves:

Level:

About the Recipe

இனிப்புப் பணியாரம் என்றாலே அது கருப்பட்டிப் பணியாரம்தான்!

Ingredients

பச்சரிசி – 1 கிலோ

கருப்பட்டி – ½ கிலோ

ஏலக்காய் – 5 எண்ணம்

எண்ணெய் – பொரித்தெடுக்கத் தேவையான அளவு

Preparation

முதலில் பச்சரிசியை முப்பது நிமிடம் நேரம் ஊற வைக்கவும்.


பின் தண்ணீரை வடித்துக் காய்ந்த துணியில் அரிசியைப் பரப்பி உலர விடவும்.


இடிக்கும் பதத்தில் அரிசியை எடுத்து அரவை ஆலையில் கொடுத்து இடியாப்பத்துக்கு அரைப்பது போல் இடித்துக் கொள்ளவும்.


பின் சலிப்பானில் இட்டு சலித்துக் கொள்ளவும்.கருப்பட்டியை ஒன்றிரண்டாகத் பொடித்துக் கொள்ளவும்.


பாத்திரத்தில் ஒன்றிரண்டாகப் பொடித்த கருப்பட்டியைப் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் குறைந்த சூட்டில் (சிம்மில்) வைக்கவும்.


கருப்பட்டி முழுவதும் கரைந்து கரைசலானவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.


கருப்பட்டிக் கரைசலை சிறிது சிறிதாக சலித்த அரிசி மாவில் சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை இட்லி மாவுப் பதத்தில் தயார் செய்யவும். ஏலக்காயை ஒன்றிரண்டாக தட்டி மாவுடன் சேர்க்கவும். இதுவே பணியாரம் சுடுவதற்கு ஏற்ற பதமாகும்.


வாணலியை அடுப்பில் வைத்து பொரித்தெடுக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டி மாவினை எடுத்து ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டவும். பொன் நிறம் வந்ததும் எடுத்து விடவும். சுவையான கருப்பட்டி பணியாரம் தயார். இதை காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்துக் கொண்டால், இரு வாரங்கள் வரை உபயோகிக்கலாம்.

bottom of page