பணக்காரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு!
பனங்கிழங்கு பனையின் கொடை! மாம்பழம் போல் வருடம் முழுத்தும் இல்லாமல் ஒரு பருவத்தில் மட்டும் கிடைக்கும் கிழங்கு. பொதுவாக மார்கழி முதல் மாசி வரை பனங்கிழங்கு கிடைக்கும். தெக்கத்தி பகுதிகளில் பனங்கிழங்கு சுடாமல் பொங்கல் இல்லை. பனை வாழ்வியலாளர்களுக்கு பனை இல்லாமல் கார்த்திகைத் திருநாள் இல்லை.
நெய்தல் மரபு அங்காடியில் - பருவத்தில் கிடைக்கும் பனங்கிழங்கை வேகவைத்து, தோலும் நாறும் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, காயவைத்து, இடித்து மாவாக்கி, பிறகு வறுத்து வைத்துக் கொள்கிறோம். வறுத்த பனங்கிழங்கு மாவு என்றே விற்பனை செய்கிறோம்.
பனங்கிழங்கு மாவு மட்டுமே பல பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருகிறது
பனங்கிழங்கில் உடலுக்குத் தேவையான சத்துகள் உள்ளன.
உடல் பலவீனமாக இருப்பவர்கள், உடல் எடை மெலிந்தவர்கள், பனங்கிழங்கு மாவைச் சாப்பிடலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
பனங்கிழங்கு மாவு எலும்பை வலுவாக்கும்.
இரத்தச் சோகையைத் தீர்க்கும்.
அதிக நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது சிறந்த மருந்து உணவு.
பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.
பனங்கிழங்கு மாவில் புட்டு, அவியல், வடை, பாயாசம், தோசை மற்றும் உப்புமா செய்யலாம்.
இந்த மாவுடன், கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான பலம் கிடைக்கும். இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும்.
இந்த மாவுடன், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இந்த மாவில், கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிடலாம்.
பனை மரம் ஒரு கற்பக விருட்சம். அந்தவகையில், பதநீர், பனம்பழம், பனங்காய் மட்டுமல்ல, பனங்காயின் விதையும்கூட, மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Comments